search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbers who lived a merry life stealing jewels"

    • அக்காள்-தங்கையை காதலித்து திருமணம் செய்தார்.
    • துணை கமிஷனர் பரிசு வழங்கி பாராட்டினார்.

    கோவை

    கோவை மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை, பணம் திருடும் சம்பவம் அதிகரித்தது.

    இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கோவை மாநகர வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் ஆர், எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் ஓடும் பஸ்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணான பதிலை அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மதுரையை சேர்ந்த சுப்பையாவின் மனைவி பார்வதி (வயது 67), பார்வதியின் மகன்கள் திவாகர் (26), கண்ணையா (30) மற்றும் திவாகரின் மனைவிகள் முத்தம்மா (23), கீதா (24) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் ஓடும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 பவுன் நகையை மீட்டனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போது திவாகள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எங்களது சொந்த ஊர் மதுரை. எங்களது குல தொழில் திருட்டு. நாங்கள் எங்கு சென்றாலும் குடும்பத்துடன் சென்று தான் திருட்டில் ஈடுபடுவோம். முதலில் நான், எனது தாயார் பார்வதி மற்றும் தம்பி கண்ணையா ஆகியோர் திருட்டு தொழில் செய்து வந்தோம்.

    அந்த சமயத்தில் எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்த முத்தம்மாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவரும் தனது அக்காவுடன் சேர்ந்து திருட்டு தொழில் செய்து வந்தது தெரியவந்தது. நாங்கள் இருவரும் நட்பாக பழகி வந்ததோம்.

    நாளடைவில் எனக்கும் முத்தம்மாவிற்கும் அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அதனால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வருவேன். அப்போது முத்தம்மாவின் அக்கா முத்துமாரிக்குக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடமும் எனது காதலை தெரிவித்தேன். அவரும் எனது காதலுக்கு சமதம் தெரிவித்தார்.

    அக்காள்- தங்கை இருவரையும் காதலித்து வந்தது முத்தம்மாவிற்கு தெரியவந்தது. பின்னர் நான் 2 பேரையும் சமாதானம் செய்து திருமணம் செய்து ஒன்றாக வாழலாம், நமது திருட்டு தொழிலை மேலும் சிறப்பாக செய்து ஜாலியாக இருக்கலாம் என்றேன். அதற்கு 2 பேரும் சமதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் திருமணம் செய்தேன். அவர்களுடன் வாழுவதற்கு 2 அறை உள்ள ஒரு வீட்டை வாங்கினேன். அதன்பின்னர் குடும்பம் நடத்த தொடங்கினேன். சில நாட்கள் கழித்து 2 மனைவிகளையும் மற்றும் எனது தாயார், தம்பியை அழைத்து திருட்டு தொழிலை தொடங்கினோம்.

    தமிழ்நாடு முழுவதும் சென்று திருட்டில் ஈடுப்படுவோம். கூட்டம் அதிகம் உள்ள பஸ்களை குறி வைத்து குடும்பத்துடன் ஏறுவோம். குறிப்பாக 90 சதவீதம் மகளிர் இலவச பஸ்களில் ஏறுவோம். அதில் தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    எனது 2 மனைவிகளும், தாயாரும் சேர்ந்து பெண்களின் நகைகளை நைசாக அறுத்து என்னிடம் கொடுப்பார்கள். ஒரு மாதம் ஒரு ஊரில் இருந்து நகைகளை திருட்டி அதில் வரும் பணத்தில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவோம். அங்கு நான்றாக சாப்பிட்டு, ஜாலியாக ஊரை சுற்றிபார்த்து மதுரை திரும்வோம்.

    அங்கு சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த ஒரு ஊரை தேர்வு செய்து குடும்பத்துடன் கிளம்புவோம். இவ்வாறு ஒவ்வொரு ஊராக சென்று நகைகளை திருடி உல்லாசமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்.

    இந்த நிலையில் கோவையில் நகைகளை திருட வந்தோம். இங்கு தொடர்ந்து நகைகளை திருடி ஜாலியாக இருந்து வந்தோம். அப்போது போலீசார் எங்களை கையும் களவுமாக குடும்பத்துடன் மடக்கி பிடித்து விட்டனர். இவ்வாறு வாக்கும ூலத்தில் தெரிவி த்தார்.

    இதை யடுத்து போலீ சார் அவர் களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் சிறப்பாக செயல் பட்ட தனிப் படை போலீசாரை துணை கமிஷனர் சந்தீஷ் பரிசு வழங்கி பாராட் டினார்.

    ×