search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroachments"

    • வத்தலக்குண்டு வில்சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்தொடர்ந்து அதிகரித்து வந்தது.
    • போலீசார்பாதுகாப்போடு பொக்லைன்மற்றும் சாலை பணியாளர்கள் உதவியோடு தாழ்வாரங்கள், கடை முன் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளங்கள் மற்றும் மணல்மேடு களை அகற்றினர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு வில்சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் அன்பையா மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன் பிறகு பெரும்பாலான கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். சிலர் அகற்றாமல் மெத்தனமாக இருந்தனர்.

    இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர்.வத்தலகுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன்மற்றும் போலீசார்பாதுகாப்போடு பொக்லைன்மற்றும் சாலை பணியாளர்கள் உதவியோடு தாழ்வாரங்கள், கடை முன் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளங்கள் மற்றும் மணல்மேடு களை அகற்றினர்.

    இதனால் சாலைவிசாலமாக காட்சியளித்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியோடு சிரமமின்றி சாலையைக் கடந்தனர். தொடர்ந்து இதுபோல சாலை இருக்க நெடுஞ்சாலைத் துறையினர்தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் மனோ தீபன் கூறுகையில், வத்தலகுண்டு நகரம் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்களே சிக்கிக் கொள்வது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாகும். பைபாஸ் ரோடு,போக்குவரத்து காவல் நிலையம் இருந்தும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியவில்லை. மதுரை ரோடு போல இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை அமைக்க வேண்டும் என்றும் யாரும் மீண்டும் ஆக்கிரமிக்காத வண்ணம்நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

    • கலைவாணன் முன்விரோதம் காரணமாக, செல்வகுமார் ஓடை புறம்போக்கில் வீடு கட்டி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
    • அதேபோல் வழக்கு தொடர்ந்த கலைவாணனும், ஓடை புறம்போக்கில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 45). இருசக்கர வாகன உதிரி பாகம் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் செல்வகுமார்(42). விவசாயி. இருவரும் உறவினர்கள்.

    இந்நிலையில் கலைவாணன் முன்விரோதம் காரணமாக, செல்வகுமார் ஓடை புறம்போக்கில் வீடு கட்டி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஐகோர்ட்டு விசாரித்தது.

    இதில், செல்வகுமார் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு ஓடை ஒத்தையடி பாதை என்று வகைப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதேபோல் வழக்கு தொடர்ந்த கலைவாணனும், ஓடை புறம்போக்கில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வகுமார் மற்றும் கலைவாணன் ஆகியோர் நீர்வழி புறம்போக்கில் வீடு கட்டி உள்ளதால், அவற்றை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.அவர்கள் இருவரும் தாங்களாகவே வீடுகளை அகற்றாததால் நேற்று கலைவாணன் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளை குன்னம் தாசில்தார் அனிதா, வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    • திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
    • காஜாமலை காலனி பெரியார் வளைவு முதல் எல்.ஐ.சி.காலனி வரை 60க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்பு, விளம்பர போர்டுகள், தட்டிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை எடுத்து ஆங்காங்கே மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. நீண்ட நாட்களாக இந்த பகுதி மக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

    இதில் காஜாமலை காலனி பெரியார் வளைவு முதல் எல்.ஐ.சி.காலனி வரை 60க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்பு, விளம்பர போர்டுகள், தட்டிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த ஆக்ரமிப்பு அகற்றும் பணி மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் தலைவிரிச்சான், இளநிலை பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    ஏற்கனவே இந்த கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை எடுக்கச் சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் எந்த எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படவில்லை.

    • நிலக்கோட்டை சாலை பகுதிகளில் கடைகளுக்கு முன்பாக சிலர் தகரக் கொட்டகை, சிறிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர்.
    • ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட மதுரை - பெரியகுளம் சாலை, அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலை பகுதிகளில் கடைகளுக்கு முன்பாக சிலர் தகரக் கொட்டகை, சிறிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.

    பொதுமக்கள் பல்வேறு வகையில் சிரமப்பட்டு கொண்டு வந்தனர். இதனை அகற்றப் நெடுஞ்சாலைத்துறைக்கு நிலக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் வீரன் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர்.

    இதனை அறிந்த சிலர் தானாகவே முன் வந்து பொருட்களை அகற்றி கொண்டனர். ஒரு சிலர் அகற்றாமல் இருந்ததால் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    இந்தப் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் யோகவேல்முருகன், அன்பையா உள்பட ஊழியர்கள் ஈடுபட்டனர். நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×