search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajiv gandhi memorial day"

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புது டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.



    இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  

    ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.#RajivDeathAnniversary
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு, மாநில தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் தலைமையில் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக சட்டம் தன் கடமையைச் செய்யும் என தெரிவித்தார்.

    அதிமுக உடைந்து பலவீனமாகிவிட்டதால், தமிழகத்தில் 2வது பெரிய கட்சி காங்கிரஸ்தான் என்றும், காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குமாரசாமி மதித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  #RajivDeathAnniversary
    ×