search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pwd employee missing"

    தேனியில் மாயமான பொதுப்பணித்துறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன். இவர் தேனி பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் அனுப்பபம்பட்டியை சேர்ந்த திலகவதி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    சுரேஷ்கண்ணணுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் கடன் தொல்லையாலும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுரேஷ்கண்ணன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பொதுப் பணித்துறை ஊழியரை தேடி வருகின்றனர்.

    ×