search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priya Varrier"

    ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியரை விளம்பர படம் ஒன்றில் நடிக்க வைக்க ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. #PriyaVarrier
    ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற `மாணிக்ய மலராய பூவே' பாடலில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம்
    பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் முன்னணி நாயகிகளையும் பின்னுக்கு தள்ளினார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பட வாய்ப்புகள் குவிய, ஒரு அடார் லவ் படத்தின் ரிலீசுக்கு பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். 

    இதுதவிர மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் படத்தின் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். 



    இப்போது மற்றொரு பெரிய கம்பெனி ஒன்று அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தையே எட்டாத நிலையில், விளம்பரம் ஒன்றில் நடிக்க ப்ரியா வாரியருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் மலையாள நடிகைகளுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். #PriyaVarrier

    கண்ணசைவு மூலம் புகழ் பெற்ற பிரியா வாரியர், எதற்காக சூர்யா படத்தை இழந்தார் என்ற காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. #Suriya #PriyaVarrier
    ஒரே ஒரு கண்ணசைவு மூலம் தென்னிந்திய திரையுலகத்துக்கே பரிச்சயம் ஆகிவிட்டார் பிரியா வாரியர். அந்த கண்ணசைவு பாடல் இடம்பெற்ற 'ஒரு அடார் லவ்' படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. 

    தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பிரியா வாரியருக்கு வாய்ப்புகள் அலைமோதுகின்றன. ஆனால் அவரால் எந்த புதிய படத்திலும் கமிட் ஆக முடியவில்லை.

    கேட்டால் ‘நான் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அடார் லவ் படம் ரிலீசான பிறகே அடுத்த படம் பற்றி முடிவெடுப்பேன்’ என்கிறார். 



    ஒரு அடார் லவ் படத்தின் ஒப்பந்தத்தின் படி அந்த படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு படத்தில் கமிட் ஆகக் கூடாதாம். இதனால் தான் பிரியா வாரியர் காத்திருக்கிறாராம். பிரியா வாரியர் இழந்த தமிழ் வாய்ப்புகளில் சூர்யா படமும் உண்டாம்.
    ×