என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priya Varrier"

    • பிரியா வாரியர் சின்ன ரோல்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார்.
    • கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது.

    'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமாகி, இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பிரியா வாரியர். மலையாளம் தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'குட் பேட் அக்லி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வரும் பிரியா வாரியர் குறித்து இணையத்தில் சில கமெண்ட்டுகள் வெளியானது. 'பிரியா வாரியர் சின்ன ரோல்களில் நடித்தே காலத்தை தள்ளப் பார்க்கிறார். கவர்ச்சி தான் அவரை காப்பாற்றுகிறது. ஜூனியர் ஆர்டிஸ்ட். கூட்டத்தில் ஒருவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    இதையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பிரியா வாரியர் காட்டம் தெரிவித்துள்ளார். "உண்மைக்கு புறம்பான செய்திகள் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சுற்றுகின்றன. இதுபோல மோசமான பேர்வழிகளை எதுவுமே செய்யமுடியாது. லைக்குகளுக்காக இப்படி செய்வதால் என்ன ஆகிவிட போகிறது. இந்த நிலை மாறத்தான் வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், தற்போது தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்டு பிடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார்.
    ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். பாடல் வெளியானதற்கும் படம் வெளியானதற்கும் இடையே சுமார் ஒரு வருட இடைவெளி உருவானது. பாடல் மூலம் கிடைத்த கவனம் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி அதுவே படத்தின் வெற்றிக்கு தடை போட்டது. அதிகபட்ச எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. 

    நடிகர், நடிகையும் இயக்குநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். அந்தப் படத்தை தொடர்ந்து பிரியா வாரியர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கன்னட திரைப்படம் ஒன்றில் அவரை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



    அறிமுக இயக்குநர் ரகு கோவி திருச்சூரில் உள்ள பிரியா வாரியரின் வீட்டில் அவரை சந்தித்து கதை கூறியுள்ளார். பிரியா வாரியருக்கு திரைக்கதை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்ட பிரியா வாரியர் திரைக்கதை பிடிக்க வில்லை என்பதால் அதை தவிர்த்துள்ளார்.
    ஒரு அடார் லவ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், அவருடன் நட்புதான், காதல் இல்லை என்று கூறியிருக்கிறார்.
    ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோ‌ஷன் நடித்திருந்தார். 

    பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோ‌ஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இதுபற்றி பிரியாவிடம் கேட்ட போது, 'சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகி விட்டது. அது நீண்ட நாள் தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்னையும் ரோ‌ஷனையும் ஜோடியாக வைத்து படங்கள் எடுக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவ்வளவு தான்’ என்றார்.
    ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier
    ஓமர் லுலு இயக்கத்தில் ரோ‌ஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’. இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் மிக மோசமான விமர்சனங்களை பெற்று, படுதோல்வியை சந்தித்தது.

    இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் தெரிவித்தார்.



    அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில், ’அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். இதனால் கதை மாறியது’ என்றார். இந்த வி‌ஷயம் குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால் என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
    ஒமர் லூலு இயக்கிய `ஒரு அடார் லவ்' படத்தில் இணைந்து நடித்த பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif
    ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு கூறும்போது, “நூரின் ஷெரீப் திறமையான நடிகை. அவருக்கு முன்னுரிமை அளித்து கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டல் பாடல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றினேன்” என்றார்.



    நடிகை நூரின் ஷெரீப் கூறும்போது, “படத்தில் எனக்குத்தான் முதன்மையான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டலால் கதையை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர். இது வருத்தமாய் இருந்தது.” என்றார்.

    இதனால் பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நூரின் ஷெரீப்புக்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்” என்றார். #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif

    ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரு அடார் லவ் இயக்குனர், படம் தோல்வியடைந்தது குறித்து காரணம் கூறியுள்ளார். #OruAdaarLove
    ஒரு அடார் லவ் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ஒமர் ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரும் படத்தில் நடித்த மற்றொரு நடிகையான நூரின் ஷெரிப்பும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஒமர், 

    “இந்தப் படத்தை தொடங்கும் போது ரோ‌ஷனும், பிரியாவும் கதையைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனக்கும் அது தான் தேவையானதாக இருந்தது. திடீரென அவர்களுக்கு கிடைத்த பிரபலம் நடிகர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது. பிரியாவும், ரோ‌ஷனும் கதையை மாற்ற முற்பட்டனர். பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறியபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று கூறினார். 



    பிரியா காட்சிகளை மாற்றியதால் நூரின் பங்குபெறும் காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர் ஏற்படுத்திய மாற்றம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஒமர் கூறியுள்ளார்.
    ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர் மீது அந்த படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் கூறியுள்ளார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu
    ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.

    இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.

    ஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார்.



    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.

    நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu

    ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
    பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

    ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.



    கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.

    காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.



    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif 

    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர், பெற்றோர்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர் என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier #OruAdaarLove
    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. காதல் காமெடி கதையான இந்த படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் பிரியா வாரியர் அளித்த பேட்டியில் ‘கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலம் அடைந்ததும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்தார்கள். எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது.



    மொபைல் போன் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சில நாட்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்துவிட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர்’ என்று கூறி இருக்கிறார்.
    ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு பிரபலமடைந்ததை தொடர்ந்து அவரது டாட்டூவும் தற்போது பிரபலமாகியுள்ளது. #PriyaWarrier #OruAdaarLove
    ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது. 

    தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.



    இதுதவிர இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் பிரியா வாரியர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. #PriyaWarrier #OruAdaarLove

    கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #PriyaVarrier #Sridevi
    கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குனருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குனர் கூறியுள்ளார்.



    1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  ஸ்ரீதேவி பங்களா டிரெய்லரில் பிரியா வாரியர் கிளாமராக தோன்றுகிறார். டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது.
    கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் மலையாள இளம் நடிகை பிரியா வாரியர் முதலிடம் பிடித்திருக்கிறார். #PriyaVarrier #Google
     கூகுளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எது தேடப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு வருகிறது.

    2018-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவை பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டு குறித்த தேடல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சினிமா மற்றும் கிரிக்கெட்டைப் பின்னுக்கு தள்ளி பிபா 2018 உலகக்கோப்பைக் கால்பந்து அதிக தேடல்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    பிபா உலகக்கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018 ஆகியவை டாப் 3 டிரெண்டிங்காக தேடலில் இருந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 படம் அதிகம் கூகுளில் தேடப்பட்ட திரைப்படமாக விளங்குகிறது. அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் மலையாள படத்தில் கண் சிமிட்டி புகழ்பெற்ற இளம் நடிகை பிரியா வாரியர் இடம் பிடித்துள்ளார்.



    இந்தியத் திரைப்படங்களில் 2.0 படம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி திரைப்படங்களில் பாகி-2, ரேஸ்-3, டைகர் ஜிந்தா ஹை, சஞ்சு ஆகியவை அதிகம் கூகுள் செய்யப்பட்டுள்ளன. ‘அவெஞ்சர்ஸ்: இன் பினிட்டி வார்’ இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படமாகும்.

    சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் டாப் 5 டிரெண்டிங் பட்டியலில் உள்ளது. அதேபோல் திருமணங்களில் இந்திய மக்களைக் கவர்ந்தது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம், தீபிகா படுகோனே திருமணம், சோனம் கபூர் திருமணம், ஆகியவை 2018-ல் டாப் டிரெண்டிங் செய்திகளில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
    ×