search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollution Control Board Members"

    மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. #PollutionControlBoard #HCMaduraiBench
    மதுரை:

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு தனது ஆய்வை தொடங்க உள்ள நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதீன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓய்வு பெய்ய ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.



    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை. அதிகாரி நசிமுதீனுக்கு ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

    அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ‌ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 90 நாட்களுக்குள் விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும்,  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான குழு விரும்பினால், நசிமுதீனிடம் கருத்து கேட்கலாம் என்றும் தெரிவித்தனர். #PollutionControlBoard #HCMaduraiBench
    ×