search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi finance company owner murder"

    பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்தவடுகபாளையம் மணிமேகலைவீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47). இவர் கடந்த சில ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வீட்டிலிருந்து இரு சக்கரவாகனத்தில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. சிங்காநல்லூர் நீரேற்று நிலையம் சாலையில் தலையில் வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கந்தசாமி பிணமாக கிடந்தார்.

    கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கந்தசாமிக்கு வந்த செல்போன் அழைப்புகள் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது கந்தசாமிக்குவந்த கடைசி அழைப்பு சோமந்துறைசித்தூரை சேர்ந்த செந்தில்வேல்(44) என்பவரிடம் இருந்து வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கந்தசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கு உடந்தையாக செந்தில்வேலிடம் வேலை பார்த்து வரும் மஞ்சநாயக்கனூரை சேர்ந்த கிருஷ்ண குமார்(22) இருந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:- செந்தில்வேல் கோவை சாலையில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் மஞ்சநாயக்கனூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்( 22) பணியாற்றி வருகிறார். கந்தசாமியிடம் செந்தில்வேல் ரூ. 30 ஆயிரம் பெற்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு கந்தசாமி ரூ.10 ஆயிரத்தை தரக் கோரி செந்தில்வேலின் ஒர்க்‌ஷாப்புக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் செந்தில்வேல் இரும்புகம்பியால் கந்தசாமி தலையில் தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த அவர் சிறிதுநேரத்தில் இறந்துள்ளார்.

    அதிர்ச்சிஅடைந்த செந்தில்வேல் கந்தசாமி கழுத்தில் இருந்த 5 பவுன் செயினைஎடுத்து கொண்டு கிருஷ்ணகுமார் உதவியுடன் தனக்குசொந்தமான காரில் வைத்து மறைத்து உள்ளார். பின்னர் கந்தசாமி வந்த இருசக்கரவாகனத்தை வெங்கடேச காலனி பகுதியில் கொண்டு சென்றுநிறுத்தி விட்டு பிணத்துடன் காரில் சோமந்துறை சித்தூரில்உள்ள செந்தில்வேலின் வீட்டுக்குசென்று நகையை பதுக்கிவைத்துள்ளார். பின்னர் அதிகாலைநேரத்தில் சிங்காநல்லூர் நீரேற்றுநிலையம் சாலையில் சடலத்தைவீசி விட்டு சென்றுள்ளனர்.

    செந்தில்வேல் செல்போன் அழைப்பு மூலம் துப்பு துலக்கப்பட்டது.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
    ×