search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police families finance aid"

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-

    ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சசிகுமார்.

    வேலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த கோபி.

    திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராஜகோபால் ஆகியோர் சாலை விபத்தில் காலமானார்கள்.

    தேனி மாவட்டம், ராஜதானி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன்.

    ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த லுக்காஸ்.

    வடசேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த விஜயகுமார்.

    சுசீந்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சொரிமுத்து.

    திருவொற்றியூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மனோகரன்.

    கல்லாவி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கார்த்திக் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள்.

    தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகேசன் தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ரவிச்சந்திரன்.

    பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோபால்.

    போடி வட்டம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த வனமூர்த்தி.

    விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குப்புசாமி.

    கோவை மாநகரம், இ3 சரவணம்பட்டி, தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்தன்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

    மார்த்தாண்டம் போக்கு வரத்துபிரிவில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த விக்டர்.

    திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோபி.

    கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகேசன்.

    சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரன்.

    நாகப்பட்டினம் மாவட்டம், ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குணசேகரன்.

    விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கலியமூர்த்தி.

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன்.

    தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நாராயணசோணை.

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாண்டியன்.

    மதுரை மாநகர், காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாஸ்கரன்.

    உச்சிப்புளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேவுகபெருமாள் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

    மதுரை மாநகரம், தல்லாகுளம் போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு மிமில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ராஜா கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

    தேனி மாவட்டம், குமுளி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணி புரிந்து வந்த குமரேசன்.

    சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப் படையில் முதல் நிலை காவலராகப் பணி புரிந்து வந்த கார்த்திகேயன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 20 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    ×