search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planet Mars"

    27-ந்தேதி நீண்டநேர சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
    சென்னை:

    இந்த நூற்றாண்டின் மிக அரிய நீண்ட சந்திர கிரகணமும், பூமியை நெருங்கும் செவ்வாய் என 2 அற்புதங்கள் இந்த மாதம் வானத்தில் நிகழ உள்ளன.

    வருகிற 27-ந்தேதி மிக நீண்ட சந்திரகிரகணம் நிகழ உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க உள்ளன. இந்த கிரகணம் 1 மணி 43 நிமிடங்கள் வரை நீடிக்கும். அப்போது நிலவில் முழுவதுமாக இருள் சூழ்ந்து இருக்கும்.

    இந்த சந்திரகிரகணம் இந்திய நேரப்படி வருகிற 27-ந்தேதி இரவு 11.54 மணிக்கு தொடங்கும். இதை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

    வருகிற 31-ந்தேதி பூமிக்கு மிக நெருக்கமாக செவ்வாய் கிரகம் வரக்கூடிய சூரிய நிகழ்வும் நடக்க உள்ளது. சூரியன், செவ்வாய் கிரகங்களுக்கு நடுவே பூமி வரும் நிகழ்வானது 26 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. அதே நேரத்தில் செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வரக்கூடிய நிகழ்வு 15 அல்லது 17 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வுதான் வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த முறை வழக்கத்தை விட செவ்வாய் பூமிக்கு அருகில் வரும். பூமியில் இருந்து 57.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் இருக்கும். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு நடந்த நிகழ்வில் பூமியில் இருந்து செவ்வாய் 55.7 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருந்தது. இதுதான் கடந்த 60 ஆயிரம் ஆண்டுகளில் பூமியை செவ்வாய் நெருங்கிய மிக குறைந்த தொலைவாகும்.

    பூமியை செவ்வாய் நெருங்கும் நிகழ்வுகளில் டெலஸ்கோப் உதவியுடனோ, அல்லது வெறும் கண்களாலோ பார்க்க முடியும். அப்போது செவ்வாய் அளவில் பெரியதாகவும், வெளிச்சமாகவும் காட்சியளிக்கும்.

    அடுத்ததாக பூமியை செவ்வாய் கிரகம் நெருங்கும் நிகழ்வு 2020-ம் ஆண்டுதான் நடக்கும். அப்போது பூமியில் இருந்து செவ்வாய் 61.76 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும். 2003-ம் ஆண்டை போல் பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் வரும் அரிய நிகழ்வு 2287-ம் ஆண்டு நடக்கும். #tamilnews
    ×