search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pappanchavadi"

    பாப்பாஞ்சாவடியில் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து முருங்கப்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி மெயின் ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று காலை வழக்கம் போல் பூசாரி பூஜை செய்ய வந்த போது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கோவில் அமைந்துள்ள இடம் எப்போதும் வாகன போக்குவரத்து உள்ளதாகும். அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிகரமாக கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 8 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை நடந்துள்ளது போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தேங்காய்திட்டு, பாப்பாஞ்சாவடி என ஒரு பகுதியையொட்டி உள்ள கோவில்களில் மட்டுமே உண்டியல் கொள்ளை நடந்துள்ளதால் இதில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    ×