search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Uthra Festival"

    • 5-ந்தேதி நடக்கிறது
    • அன்னதானம் வழங்க ஏற்பாடு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் நற்குன்று குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வரும் 5-ந்தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து தம்பதிகள் சங்கல்பமும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் அன்னதானமும் மாலை 6.00 மணி அளவில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதி உலாவும் வானவேடிக்கையுடன் நடைபெறும்.

    • தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ந் தேதி வரை நடக்கிறது.
    • 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    மதுரை

    மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுத பாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலை யில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம் நிகழ்ச்சியும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவில் நாளை (2-ந் தேதி) மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். வருகிற 5-ந் தேதி உத்திர தினத்தன்று காலை 4 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், ருத்ர ஜெப விசேஷ அபி ஷேக ஆராதனை, தங்க கவச சாத்துப்படி நடக்கிறது. அன்று இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 6-ந் தேதி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழா நடக்கும் 7 நாட்களி லும் தினசரி காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • பங்குனி உத்திர திருநாள் இந்த ஆண்டு வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளது.
    • இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திரு விழாவாக பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்திர திருநாள் இந்த ஆண்டு வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அன்றைய நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. எனவே உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.

    மேற்படி உள்ளூர் விடு முறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 - கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப் பட்டுள்ள உள்ளூர் விடு முறையை ஈடு செய்யும் வகையில் 6.5.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இவ்வேலைநாள் பெருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×