என் மலர்

  நீங்கள் தேடியது "Panchayath Member"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக இருந்து வருகிறார்.
  • நேற்றிரவு ஒரு கும்பல் நெல்லையப்பனை அவரது வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  நெல்லை:

  பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி பிரியா.

  இவர் இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மற்றொருவருக்கும் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் நேற்றிரவு ஒரு கும்பல் நெல்லையப்பனை அவரது வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த நெல்லையப்பன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×