search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchavadi anjaneyar"

    ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் மற்றும் வலம்புரி மஹா கணபதி ஆகிய சுவாமிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை திருப்பவித்ரோத்சவ விழா நடக்கிறது.
    புதுவை அருகே உள்ள திண்டிவனம் நெடுஞ்சாலையில் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது.

    பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மையை முன்னிட்டு ஜெய மங்கள பட்டாபிஷேக ராமசந்திர மூர்த்தி, ஆஞ்சநேயர் மற்றும் வலம்புரி மஹா கணபதி ஆகிய சுவாமிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை திருப்பவித்ரோத்சவ விழா நடக்கிறது.

    திருப்பவித்ரோத்சவத்தை முன்னிட்டு இன்று காலை பூர்வாங்க பூஜைகள், யஜமான ஸங்கல்பம், புண்யாஹ வாசனம், அங்குரார் பணம், வாஸ்து சாந்தி மஹா சாந்தி ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் ஹோமம் பூஜைகள் நடக்கிறது.

    இதில் பங்கு பெற விருப்பமுள்ள பக்த கோடிகள் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் அனுமதி பெற்ற பின் பங்கு கொண்டு தரிசனம் செய்யலாம்.

    இந்த தகவலை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
    ×