search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan election"

    பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #Pakistanection

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் பிரிவு மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இண்சாப் கட்சியும் போட்டியிடுகின்றன.

    மேலும் பெனாசிர் மகன் பிலால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தேர்தல் களத்தில் நிற்கிறது. பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்த நிலையில் வெற்றி பெற போவது யார் என்று தேர்தலுக்கு முன்பு மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன.

    அதில் கராச்சியை சேர்ந்த பல்ஸ் கன்சல்டன்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இண்சாப் கட்சிக்கு 30 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் இவரது எதிரி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) கட்சிக்கு 27 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 17 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘காலப் பாகிஸ்தான்’ என்ற நிறுவனம் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் இன்ரான்கான் கட்சி25 சதவீதம் வாக்குகள் பெற்று 2-வது இடத்துக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு 29 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, பாகிஸ்தான் அரசியலில் இருந்து நவாஸ் செரீப் வெளியேற்றப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பிற கட்சிகளில் இருந்து விலகி 92 அரசியல்வாதிகள் இம்ரான்கான் கட்சியில் இணைந்துள்ளனர்.

    இது அவரது கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என அரசியல் நிபுணர் மைக்கேல் குகெல்மேன் தெரிவித்துள்ளார். #Pakistanection

    பாகிஸ்தான் தேர்தலில் அல்லா-ஓ-அக்பர் தெக்ரிக் கட்சி சார்பில் போட்டியிடும் பயங்கரவாத சயீத் கட்சியில் 13 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதில் பயங்கரவாதி ஹபீத் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) கட்சியும் போட்டியிடுகிறது.

    இக்கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே அல்லா-ஓ- அக்பர் தெக்ரிக் கட்சியின் சார்பில் இவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

    இக்கட்சியின் சார்பில் மொத்தம் 260 பேர் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 79 பேர் பாராளுமன்றத்துக்கும், 181 பேர் சட்டசபை தேர்தலிலும் களமிறங்கியுள்ளனர்.

    தேர்தலில் போட்டியிடுபவர்களில் 13 பேர் பெண்கள், அவர்களில் 10 பேர் பொதுப்பிரிவிலும், 3 பேர் ஒதுக்கீட்டுப்பிரிவிலும் போட்டியிடுகின்றனர். இத்தகவலை எம்.எம்.எல். கட்சியின் செய்தி தொடர்பாளர் நதீம் அவான் தெரிவித்துள்ளார்.

    அரசியல் பின்னணி மற்றும் போராடும் திறன் படைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
    பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். #PakistanElection #MaryamNawaz
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் 120-வது தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதேசமயம், போட்டியிட விரும்புவோர் குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் கேட்டிருந்தார்.

    அதன்பின்னர் லாகூரில் உள்ள 125 மற்றும் 127-வது தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் உள்ள 173-வது தொகுதியில் போட்டியிடுவதற்காக மரியம் நவாஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது லாகூர் மற்றும் பஞ்சாபில் உள்ள 127 மற்றும் 173-வது தொகுதிகளில்  மரியம் நவாஸ் போட்டியிட உள்ளார். கட்சியின் பாராளுமன்றக் குழு இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. #PakistanElection #MaryamNawaz
    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு ஜூன் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார். #Pakistanelection #expresidentZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் 2008-ம் ஆண்டு முதல் 2013 வரை அந்நாட்டின் பதினொன்றாவது அதிபராக பெனாசிரின் கணவரான ஆசிப் அலி சர்தாரி பதவி வகித்தார்.

    அதற்கு முன்னதாக லயாரி மற்றும் நவாப்ஷா பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக 1990 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் இருமுறை பதவி வகித்துள்ள சர்தாரி(62), வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தற்போது தெரிவித்துள்ளார்.

    சிந்து மாகாணத்தின் முதல் மந்திரி சையத் முராத் ஷா வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிப் அலி சர்தாரி, இந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் தனது வேட்பு மனுவை விரைவில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanelection #expresidentZardari
    ×