search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milli Muslim League"

    பாகிஸ்தான் தேர்தலில் அல்லா-ஓ-அக்பர் தெக்ரிக் கட்சி சார்பில் போட்டியிடும் பயங்கரவாத சயீத் கட்சியில் 13 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதில் பயங்கரவாதி ஹபீத் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) கட்சியும் போட்டியிடுகிறது.

    இக்கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே அல்லா-ஓ- அக்பர் தெக்ரிக் கட்சியின் சார்பில் இவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

    இக்கட்சியின் சார்பில் மொத்தம் 260 பேர் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 79 பேர் பாராளுமன்றத்துக்கும், 181 பேர் சட்டசபை தேர்தலிலும் களமிறங்கியுள்ளனர்.

    தேர்தலில் போட்டியிடுபவர்களில் 13 பேர் பெண்கள், அவர்களில் 10 பேர் பொதுப்பிரிவிலும், 3 பேர் ஒதுக்கீட்டுப்பிரிவிலும் போட்டியிடுகின்றனர். இத்தகவலை எம்.எம்.எல். கட்சியின் செய்தி தொடர்பாளர் நதீம் அவான் தெரிவித்துள்ளார்.

    அரசியல் பின்னணி மற்றும் போராடும் திறன் படைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
    ×