search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NorthEast Moonsoon"

    நவம்பர் 1-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
    புதுடெல்லி:

    தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை மையம் கணித்திருந்தது. ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை. அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது. டிட்லி மற்றும் லூபன் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் பருவமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains
    ×