search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North East associations"

    கிரிக்கெட்டில் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவ தயார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிமாநில வீரர்களுக்கு கட்டுபாடும் விதித்துள்ளது. #BCCI
    லோதா கமிட்டியின் பரிந்துரையை செயல்படுத்த பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற பரிந்துரையை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநிலமான மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மிசோரம் அணிகள் ரஞ்சி டிராபியில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதன்மையான ரஞ்சி தொடரில் பங்கேற்கும் இந்த அணிகள் சொந்த மாநிலத்தில் சிறப்பான அடிப்படை வசதிகளை பெறவில்லை. ஒரு அணி ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒரு பயிற்சியாளர், டிரைனர், ஒரு பிசியோ இருக்க வேண்டும். இதுகூட பெரும்பாலான அணியில் இல்லை.

    இதனால் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பிசிசிஐ-யிடம் வடகிழக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பிசிசிஐ-யும் சம்மதம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உள்ளூர் வீரர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து மூன்று வீரர்களை மட்டுமே எடுக்க வேண்டும் கட்டுப்பாடும் விதித்துள்ளது.
    ×