search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nizam Osman Ali Khan Bahadur"

    ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ஐதராபாத் நிஜாம் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ் மற்றும் டீ கப் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #goldtiffinbox #nizammuseum
    ஐதராபாத்:

    சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது ஐதராபாத் நிஜாம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.

    கடைசியாக 7-வது நிஜாம்உஸ்மான் அலிகான் பகதூர் ஆவார். அவருக்கு பின் நாடு சுதந்திரம் பெற்று ஐதராபாத் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    நிஜாம் மன்னர்கள் அரண்மனையில் பயன்படுத்திய பொருட்கள் ஐதராபாத்தில் புரானி ஹவேலியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    கடைசி நிஜாம் பயன்படுத்திய தங்கத்தால் ஆன 5 அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தங்க டீ கப்-சாசர், தங்க ஸ்பூன் ஆகியவையும் இடம்பெற்று இருந்தது. இவை விலைமதிப்பற்றது.


    இந்தநிலையில் இந்த தங்க டிபன் பாக்ஸ் மற்றும் டீ கப்-சாசர், ஸ்பூன் முதலியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி அருங்காட்சியக நிர்வாகி போலீசில் புகார் செய்தார். உடனே போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று மியூசியத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளையர்கள் இந்த மியூசியத்தின் 2 அடி அகலம் கொண்ட வென்டிலேட்டர் வழியாக கயிறுகட்டி உள்ளே இறங்கி இவற்றை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.

    மியூசியத்தில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கும். அதை வைத்து கொள்ளையர்கள் யார் என்று கண்டு பிடிக்கலாம் என்று போலீசார் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவின் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர்.

    இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். தங்கத்தால் ஆன இந்த பொருட்கள் ஐதராபாத்தில் நவாப்களின் ஆட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது பரிசளிக்கப்பட்டவையாகும். #goldtiffinbox #nizammuseum
    ×