search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal government hospital"

    நாமக்கல் மோகனூர் அருகே சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DengueFever
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சசிதரன் (வயது 4). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு இடங்களில் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் குணமாகாததால் சசிதரன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசாதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொசு வலையுடன் கூடிய தனிவார்டில் சசிதரன் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் உஷா கூறுகையில், சசிதரனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுவனின் தட்டணுக்களை பரிசோதித்து, அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நல்ல நிலையில் சிறுவன் உள்ளான் என்றார். #DenguFever
    ×