search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mullaiperiyar dam"

    • நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    • 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 511 கனஅடியாக இருந்தது.

    அணையின் நீர்மட்டம் 138.20 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 142 அடியை மீண்டும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 1257 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 92 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்து விட்டதால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ரூல்கர்வ் விதிப்படி முல்லைபெரியாறு அணை யில் வருகிற 20-ந்தேதிவரை 140 வரையிலும், 30-ந்தேதி வரை 142 அடிவரையிலும் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம். இதனால் அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள னர்.

    இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. வரத்து 1250 கனஅடி, திறப்பு 667 கனஅடி, இருப்பு 6660 மி.கனஅடி.

    வைகைஅணையின் நீர்மட்டம் 69.91 அடியாக உள்ளது. வரத்து 1195 கனஅடி, திறப்பு 1469 கனஅடி, இருப்பு 5802 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 132 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடி, வரத்து 86 கனஅடி, இந்த 2 அணை களும் முழுகொள்ளளவை எட்டிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ள நிலையில் மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ளது. மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணைக்கு 965 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடித்து வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து 1899 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து மதுைரமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 178 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 138 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. 127 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 97 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 0.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, போடி 2.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.
    • மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 818 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 673 கன அடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 526 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. 926 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1688 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் பாசனத்திற்கு 92 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.
    • வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பருவமழை காலத்தின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1378 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது. 468 கனஅடிநீர் வருகிறது. 1289 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.55அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 17-வது வார்டு கல்லக்கரை ஓடைப்பகுதியை சேர்ந்தவர் சிவா(32). இவர் காஞ்சிமரத்துறை முல்லைபெரியாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிவாவை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இதனைதொடர்ந்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சிவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு வெகுநேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 131.05 அடியாக குறைந்துள்ளது.

    கூடலூர்:

    மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வைகை அணையில் முழுகொள்ளளவை நிலை நிறுத்தும் வகையில் முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு 226 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1555 கனஅடி நீர் திறக்கப்படுகிது. இதனால் நீர்மட்டம் 131.05 அடியாக குறைந்துள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.23 அடியாக உள்ளது. 1346 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 10 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.49 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் பதிவாகவில்லை.

    • மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 119 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 131.55 அடியாக சரிந்துள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 69.54 அடியாக உள்ளது. 1360 கனஅடிநீர் வருகிறது.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரிந்தது.

    இதனால் நீர்திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பை படிப்படியாக குறைத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 1622 கனஅடிநீர் திறக்கப்பட்டது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 119 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 131.55 அடியாக சரிந்துள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.54 அடியாக உள்ளது. 1360 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.

    10 கனஅடிநீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.82 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137 அடிவரை உயர்ந்த நிலையில் மழை ஓய்ந்ததால் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
    • அணையின் நீர்மட்டம் 133.90 அடியாக சரிந்துள்ளது. 294 கனஅடிநீர் வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137 அடிவரை உயர்ந்த நிலையில் மழை ஓய்ந்ததால் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    அதன்படி 1867 கனஅடியாக இருந்த நீர்திறப்பு 1755 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 133.90 அடியாக சரிந்துள்ளது. 294 கனஅடிநீர் வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. 1490 கனஅடிநீர் வருகிறது. நேற்றுவரை 2069 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு 1425 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 25 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.46 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் முல்ைலபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் முல்ைலபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. மேலும் தமிழகபகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி செப்டம்பர் 10-ந்தேதிக்கு பின்னர் 142 அடிவரை தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் உயருமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 2534 கனஅடிநீர்வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70.57 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 2286 அடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. அதுஅப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்ம்டடம் 126.34 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 10.4, தேக்கடி 9.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
    • விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மேலும் முல்லைபெரியாறு, வைகையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது. விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணைக்கு 2143 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. 2485 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 368 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 72 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 14.4, தேக்கடி 5.8, உத்தமபாளையம் 1.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 136 அடியை கடந்த நிலையில் 142 அடியை எட்டுமா என விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர். ஆனால் ரூல்கர்வ் முறைப்படி 10ந் தேதி வரை 142 அடி தேக்க முடியாது.

    இதனால் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விட ப்பட்டுள்ளது. இதனால் கேரள பகுதிகளான வல்லக்கடவு, வண்டிபெரி யாறு, சப்பாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்று 10 ஷட்டர்கள் மூலம் 2228 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 138.25 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடிக்கிறது. அணைக்கு 3040 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2761 கன அடி நீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 92 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 133 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்கும் 130 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.

    பெரியாறு 21.4, தேக்கடி 30.8, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் திறப்பு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

    கூடலூர்:

    கேரளாவில் பருவ–மழை போக்கு காட்டி வரும் நிலையில் முல்லை–ப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாற்றாங்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று வரை 600 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி குடிநீருக்கும் திறக்கப்பட்டது.

    இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 129.25 அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்டுள்ள வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக சரிந்து 54 அடியாக குறைந்துள்ளது.

    அணைக்கு 297 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.30 அடியாக உள்ளது. 59 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்ைல. சோத்துப்பாறை அைணயின் நீர்மட்டம் 86.26 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.8, தேக்கடி 6.8, கூடலூர் 1.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×