என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழை ஓய்ந்ததால் 132 அடிக்கும் கீழ் சரிந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
- மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 119 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 131.55 அடியாக சரிந்துள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 69.54 அடியாக உள்ளது. 1360 கனஅடிநீர் வருகிறது.
கூடலூர்:
பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரிந்தது.
இதனால் நீர்திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பை படிப்படியாக குறைத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 1622 கனஅடிநீர் திறக்கப்பட்டது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 119 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 131.55 அடியாக சரிந்துள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.54 அடியாக உள்ளது. 1360 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.
10 கனஅடிநீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.82 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.