search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkombu Dam"

    திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், கொள்ளிடம் மற்றும் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #MukkombuDam
    திருச்சி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் அணை நிரம்பியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75,170 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரம் உள்ள சுமார் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.



    16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் பாதையை ஒட்டி பயிர் செய்யப்பட்டுள்ள பருத்தி, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 42 ஆயிரம் கன அடியும், காவிரியில் 30 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #MukkombuDam

    ×