search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam Water lever decrease"

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் கடந்த மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதற்கிடையே கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்தும் படிப்படியாக சரிந்தது.

    கடந்த 5-ந்தேதி 15 ஆயிரத்து 487 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 11 ஆயிரத்து 633 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 10 ஆயிரத்து 429 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடந்த சில நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

    கடந்த 4-ந் தேதி 119.61 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.06 அடியாக சரிந்தது. இன்று நீர் மட்டம் மேலும் சரிந்து 118.61 அடியாக குறைந்தது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    ×