search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam water inflow increase"

    மேட்டூர் அணைக்கு நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை104.18 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 5 ஆயிரத்து 23 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று பல மடங்கு அதிகரித்து 23 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

    தற்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 104.47 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.59 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் நேற்று 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 20 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள். #MetturDam
    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இன்று காலை 16 ஆயிரத்து 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1-ந்தேதி 20 ஆயிரத்து 495 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 13 ஆயிரத்து 278 கன அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இன்று காலை 16 ஆயிரத்து 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கோப்புப்படம்

    அணையில் இருந்து நேற்று 18 ஆயிரத்து 267 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்றும் 18 ஆயிரத்து 133 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 119.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 119.61 அடி யாக இருந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 2-ந்தேதி 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    சனிக்கிழமையான இன்று காலை முதலே ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன் உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர். #MetturDam
    கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரத்து 660 கனஅடியாக அதிகரித்துள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றுக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு மேட்டூருக்கு வருகிறது. நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரத்து 780 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 26 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தள்ளது.

    ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியதால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி அற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 61 ஆயிரத்து 291 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 68 ஆயிரத்து 660 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து நேற்று 60 ஆயிரத்து 574 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 68 ஆயிரத்து 490 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று 120.31 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.30 அடியாக இருந்தது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    ×