search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam accident"

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் ஏட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பாக்கியம்(வயது43). இவரது கணவர் சண்முகவேலாயுதம். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரபாவதி (14) என்ற மகளும் கண்ணன்(13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி பாக்கியம் பணிநிமித்தமாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு தனது மொபட்டில் அன்னூர் திரும்பி கொண்டிருந்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் -சிறுமுகை ரோட்டில் அறிவொளிநகர் அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த வேன் பாக்கியத்தின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் நகை கடை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாயப்பனூர் ரோட்டில் உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ்பாபு. (வயது 36). இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மானேஜராகப் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் காந்திபுரம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கின் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீர் என இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீஸ் பாபுவை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×