search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Messi har trick"

    உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் ஹைதி அணிக்கு எதிராக அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். #WorldCup2018 #Messi
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன் தற்போது நட்பு ரீதியிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஹைதி அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 4-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் அர்ஜென்டினா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது மற்றும் 66-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 69-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க 4-0 என வெற்றி பெற்றது.
    ×