search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant death"

    கள்ளிக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    விருதுநகர் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58) வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி 4 வழிச்சாலையில் அழகர்சாமி சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகர்சாமி இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    சென்னை புதுப்பேட்டை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52) வியாபாரி. இவர் நேற்று மாலை ஒரு மினிலாரியில் பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

    மினிலாரியை தர்மபுரி மாவட்டம் பச்செனம் பட்டியை சேர்ந்த கந்தன்(25) என்பவர் ஓட்டிசென்றார். அந்த மினிலாரி இன்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் உள்ள திருச்சி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலை யோரம் ஏற்கனவே ஒரு லாரி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்புறம் திடீரென மினிலாரி மோதியது. விபத்தில் மினிலாரி அப்பளம்போல் நொறுங்கியியது.

    இதில் மினிலாரியில் இருந்த சம்சுதின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் கந்தன் பலத்தகாயம் அடைந்தார். விபத்துகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    படுகாயம் அடைந்த கந்தனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கம்பைநல்லூர் அருகே பால்வியாபாரி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே பெரியகவுண்டம்பட்டி ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி டைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    உடனே இது குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தருமபுரி, அரியகுளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அண்ணாமலையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அண்ணாமலை மனைவி போலீசில் கணவர் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார்.

    அப்போது அவரது மனைவி கூறியதாவது:-

    தருமபுரி, அரியகுளம் அண்ணாநகரில் ஆவின் பாலகம் நடத்தி வந்தார். மேலும் தட்டு சீட்டும், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நேற்றிரவு 10 மணிக்கு ஒருவர் எனது கணவர் அண்ணாமலையை ஒருவர் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் நானும் எனது உறவினரும் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தேடினோம். ஆனால் அவர் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று காலை பெரியகவுண்டம்பட்டி அருகே உங்களது எனது கணவர் அண்ணாமலை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.

    சீட்டுபணம் தருவதில் தகராறு ஏற்பட்டு அடித்து கொன்றனர்களா? அல்லது முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நேற்றிரவு அண்ணாமலையை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    ஈத்தங்காடு சந்திப்பில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவர் கொட்டாரம் சந்திப்பில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    பெரியசாமி தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். இன்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் பொருட்களை வாங்குவதற்காக பெரியசாமி கோட்டார் மார்க்கெட்டுக்கு வந்தார். இங்கு பொருட்களை வாங்கி விட்டு அவர் கடைக்கு திரும்பி சென்றார்.

    சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி பெரியசாமி ரோட்டில் கீழே விழுந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த பலசரக்கு பொருட்கள் ரோட்டில் சிதறி விழுந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பெரியசாமி சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தென்தாமரைகுளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெரியசாமி பலியானது பற்றி அவரது மனைவி லதாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும், அவரது மகனும் அங்கு வந்தனர்.

    பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்தனர். பிணமாக கிடந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×