search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical colleges"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
    • சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

    டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநில தேர்வு குழுவுடன் பகிர்ந்து கொள்ளும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 150 இடங்களுக்கு நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்-தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019-ன் கீழ் நிறுவப்பட்டு 2021-ம் ஆண்டில் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். 'சீட்'கள் கிடைக்கும்.

    இதன் மூலம் மொத்தம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணி்க்கை 11,575-ஆக உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 74-ஆக அதிகரித்து உள்ளது.

    2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 187 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு நிதி அயோக் அமைப்பிடம் பரிந்துரை செய்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VicePresident #VenkaiahNaidu
    சென்னை:

    கோவையை மையமாக கொண்ட குடலியல், ஜீரண மண்டல நோய்களுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியான ‘ஜெம்’ ஆஸ்பத்திரியின் கிளை திறப்பு விழா சென்னை பெருங்குடியில் நேற்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக ‘ஜெம்’ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு வரவேற்பு உரையாற்றினார். நிறைவில் ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ்.அசோகன் நன்றி உரையாற்றினார். விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், டாக்டர் சி.பழனிவேலுவின் மனைவி ஜெயா பழனிவேலு, மகன்கள் டாக்டர் பி.செந்தில்நாதன், டாக்டர் பி.பிரவீன் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமானவை. தமிழகம் வளமான நிலத்தை மட்டும் கொண்டது அல்ல. புத்தி கூர்மையானவர்களையும் கொண்டது. தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த நாட்டின் நாகரிக வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் அரசியலுக்காக அரும்பாடு பட்டுள்ளனர்.

    தமிழகம் சட்டம்- ஒழுங்கு, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்தியாவில் விரிவான மருத்துவ சேவைகளை வழங்குவதில், நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான வித்தியாசம் பல்வேறு வழிகளில் பெரும் சவாலாக உள்ளது.

    எனவே, தனியார்துறையினரும் அரசாங்கத்துடன் இணைந்து மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டிய தருணம் ஏற்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆரம்பக் கட்ட மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்களை ஏற்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு அவசியமாகிறது. அதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து இருக்கிறது. வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 187 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க ‘நிதி அயோக்’ அமைப்பிடம் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “மகப்பேறு மற்றும் குழந்தை நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 2030-ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2016-ம் ஆண்டுக்குள் அடைந்த 3 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டும் அல்லாது மிகச்சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வரும் காரணத்தால், இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “தமிழகம் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு மருத்துவ கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் டாக்டர்களை உருவாக்கி வருகிறது. ஏழைகளும் உயர்தர சிகிச்சை பெறும் வகையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்றார். 
    தமிழகத்தில் இ.எஸ்.ஐ. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருவதாக இ.எஸ்.ஐ. மண்டல இயக்குனர் லூர்துவேதம் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட மனித வள குழுமம் சார்பில் இ.எஸ்.ஐ. பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை மாவட்ட இயக்குனர் லூர்துவேதம், இணை இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட கிளை மேலாளர் செல்வம், டாக்டர் ஹக்கீம்சேட், ராஜசேகரன், மனிதவள குழுமத்தின் தலைவர் திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இ.எஸ்.ஐ. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இ.எஸ்.ஐ. மூலம் 9 மருத்துவ கல்லூரிகள், ஒரு பல் மருத்துவ கல்லூரி உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் 2 மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சேர நீட் தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் இ.எஸ்.ஐ. தொழிலாளியின் குழந்தைகள் 220 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது கலைக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகவும் குறைவாகும்.

    தற்போது இந்த கல்லூரிகளில் உள்ள 400 இடங்களை 300-க்கும் அதிகமான கேரள மாணவர்களே பெறுகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இதனை பயன்படுத்தி தங்கள் மருத்துவ கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×