search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mandasur"

    மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி கடத்தி, பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். #MandasurGirlAbduct #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் மாநிலம் மண்டாசுர் பகுதியில் கடந்த 26-ம் தேதி 8 வயது சிறுமி ஒரு கும்பலால் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சிறுமியின் நிலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ம.பி.யில் 8 வயது சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், மண்டாசுர் பகுதியில் 8 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். இதுபோன்ற நிலைகளில் நாம் குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #MandasurGirlAbduct #RahulGandhi 
    ×