search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakula Vinayagar College"

    • கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.

    ஷோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார்.

    எந்திரவியல் துறை பேராசிரியர் ரட்ஜராம் தேசிய அறிவியல் தினம் குறித்து பே சினார். அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெங்களூரு போர்செமி கண்டக்டர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விநாயக பாவு, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஐயராஸ் ஆகியோர் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் ெதாகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளை இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் ஒருங்கிணைத்தார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுமித்ரா நன்றி கூறினார்.

    • என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
    • எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    புதுச்சேரி:

    என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.

    கருத்தரங்கிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் அனை வரை யும் வரவேற்றார்.

    எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னாள் மாணவர் நரேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தா ர். முடிவில் உதவி பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் செய்திருந்தார்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.எஸ் வெங்கடாசலபதி, மைலம் பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் தக்ஷஷிலா பல்கலைக்கழகம் பதிவாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர்.

    இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×