என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த அறிவியல் தினவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் அறிவியல் தினவிழா
- கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
- அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
ஷோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார்.
எந்திரவியல் துறை பேராசிரியர் ரட்ஜராம் தேசிய அறிவியல் தினம் குறித்து பே சினார். அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெங்களூரு போர்செமி கண்டக்டர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விநாயக பாவு, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஐயராஸ் ஆகியோர் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் ெதாகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் ஒருங்கிணைத்தார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுமித்ரா நன்றி கூறினார்.






