search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "location study"

    • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் 224 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு, 1500 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டியில் அ.தி.மு.க. டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-

    தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் இன்று மதுரைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தங்களது தந்தையார் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை ஆய்வு செய்ததாக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் இந்த நூலகத்தை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் மதுரையில் அடையாளங்க ளில் ஒன்றாக இருக்கின்ற சிம்மக்கல் மைய நூலகம் பராமரிப்பின்றி இடிந்து விழுந்து இருக்கின்ற சூழ்நிலையில் உள்ளது. அதுவும் முதலமைச்சர் தந்தையார் சிலை அருகே அமைந்திருக்கின்ற அருகே தான் இந்த சிம்மக்கல் மைய நூலகம் அமைந்துள்ளது.

    ஆகவே இந்த நூலகத்தின் பழம்பெருமையை காப்பா ற்றும் வகையில் முதல மைச்சர் சிம்மக்கல் நூலக த்தில் முக்கியத்து வத்தை உணர்த்தும் வகையில் அதை ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்

    புரட்சித்தலைவி அம்மா வின் கனவை நனவாக்கும் வண்ணம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.சும் தொடர்ந்து பாரத பிரதமரிடம் அழுத்தம் கொடுத்தனர். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 224 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு, 1500 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

    ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் அந்த வளாகத்தை முதலமைச்சர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என்பது மக்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்பு ஆகும்.

    முதலமைச்சர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து ஏறத்தாழ 10 முறை மதுரைக்கு வந்துள்ளார். இதில் ஒருமுறையாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு இருந்தால் அதன் முக்கியத்துவத்தை அதன் மூலமாக அரசு அலுவலர்கள் எடுத்து வைப்பதற்கு சிறப்பாக இருந்து இருக்கும்.

    திட்டங்களை கள ஆய்வு செய்வது மூலமாகத்தான் அதை நாம் விரிவுபடுத்தி முழுமைப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தினை முதலமைச்சர் ஆய்வு செய்வாரா ? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    முல்லைப்பெரியாறு அணை குறித்து உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதனால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×