என் மலர்

  நீங்கள் தேடியது "Liquor-Ganja Hoarding"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மயிலம் அருகே சாராயம், கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மயிலம் எல்லைக்குட்பட்ட அவ்வையார் குப்பம் அருகே ரோந்து பணியில் இருந்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ள சாராயம் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை தடுக்கும் நோக்கத்துடன் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார் குப்பம் கிராமத்தில் கஞ்சா மற்றும் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் வந்தது.

  அதன் அடிப்படையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.லட்சுமி, மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், போலீசார் இஸ்மாயில், ராஜ்குமார், பிரபாகரன் மற்றும் பழனி ஆகியோர் தலைமையில் மயிலம் எல்லைக்குட்பட்ட அவ்வையார் குப்பம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 26) முப்புளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 200லிட்டர் சாராயம், 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

  ×