search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laptop and cell phone"

    • கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி லேப்டாப், செல்போன் பறித்த 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    மதுரை

    ஆந்திர மாநிலம், நாராயணபுரத்தைச் சேர்ந்த சிம்மாசலம் மகன் அனவேஸ் (வயது 19). இவர் மதுரை வளர் நகரில் தங்கி தனியார் கணினி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், நண்பர்கள் சாஜித், ஜீவன்குமார் ஆகியோருடன் மதுரை-மேலுார் 4 வழிச் சாலையில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த 10 பேர் கும்பல், அனவேசிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டியது. அவர் தர மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், அனவேசை தாக்கியது. பின்னர் அந்த கும்பல் அனவேஸ் வைதத்திருந்த லேப்டாப், செல்போனை பறித்து கொண்டு தப்பியது.

    காயமடைந்த அனவேசை நண்பர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை, ஆதிநாராயணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அனவேசை தாக்கிய கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீசார் கருப்பாயூரணி, மேலூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 7 பேர் சிக்கினர்.

    அவர்களை போலீசார் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களில் 2 பேர் தவிர மீதம் உள்ள 5 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து அனவேசிடம் லேப்டாப், செல்போன் திருடிய மேலூர் தெற்கு தெரு, வைத்தியநாத அய்யர் சந்து பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தகுமார் என்ற மணிப்புறா (24), கருப்பாயூரணி சீமான் நகர், பிள்ளையார் கோவில் தெரு முத்துப்பாண்டி மகன் மாலை வீரன் (21) ஆகியோர் உள்பட 7 பேரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

    ×