என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kozhinjampara accident
நீங்கள் தேடியது "Kozhinjampara accident"
கொழிஞ்சாம்பாறை அருகே பஸ் மீது கார் மோதி எம்.பி.பி.எஸ். மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை வண்ணான்மடை நீலங்காட்சியை சேர்ந்தவர் பால்ராஜ். ரைஸ் மில் அதிபர். இவரது மகன் பிரின்ஸ் வில்லியம்ஸ் (வயது 24). இவர் ஒற்றப்பாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
கல்லூரிக்கு செல்ல நீலங்காட்சியில் இருந்து காரில் புறப்பட்டார். கார் ஒற்றப்பாலம் வந்தபோத கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த பஸ் மீது வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். மாணவர் பிரின்ஸ் வில்லியம்ஸ் இடிபாடுகளில் சிக்கி கிடந்தார்.
இது குறித்து ஒற்றப்பாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காரை வெட்டி மாணவரை மீட்டபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X