search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KOVIL FESTIVEL"

    • கரூர் பேச்சிப்பாறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள பேச்சிப்பாறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி மங்கள இசையுடன் கோ பூஜை, யாகசாலை பூஜை, ஹோமம், நாடி சந்தானம், விசேஷ திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு மகாமாரியம்மன், மகாகணபதி கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் மகாமாரியம்மன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சமேத மதுரை வீரன், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்

    உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் நடைபெற்றது.

    முன்னதாக சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி புனித நீர் எடுத்துக்கொண்டு மேள, தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, முதலாம் கால யாக பூஜை, கோபுல கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×