search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodambakkam cheating"

    கோடம்பாக்கத்தில் வங்கி கடனில் வாங்கிய காரை அடமானம் வைத்து மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கோடம்பாக்கம் சிவன் கோயில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் வடபழனி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை ரூ.2 லட்சத்து 50ஆயிரம் முன்பணம் செலுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கினேன்.

    ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காருக்கு தவணையை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் மற்றொரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அறிமுகமான தஞ்சாவூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் என்னிடம் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து காருக்கான மாத தவனையை வங்கியில் நேரடியாக செலுத்துவதாக கூறி காரை பெற்று சென்றார்.

    ஆனால் இதுவரை காருக்கு மாத தவனையும் செலுத்தாமல் காரையும் திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதற்கிடையே வெற்றி வேல் காரை திருச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் அடமானம் வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது என்னை கொன்று விடுவதாக மிரட் டல் விடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறி யிருந்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிவேல், பிரதீப், பிரபு திருச்சியைச் சேர்ந்த தினேஷ்குமார், அருண்பிரசாத் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.

    ×