search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KarnatakaElections"

    கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KarnatakaElections #BSYeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் 35,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா 86,983 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை, எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கோனி மலடேசா 51,583 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா பெறும் 7வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElections #BSYeddyurappa
    மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ, சுரங்க ஊழலில் சிக்கியவர்களை பாதுகாத்து வருகின்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். #KarnatakaElection2018 #CBI #RahulGandhi
    பெங்களூரு :

    கர்நாடகாவில் நாளை மறுநாள் சட்டமன்ற  நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, சுரங்க ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள ரெட்டி சகோதர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட பல்லாரி மாவட்டத்தின் 8 தொகுதிகளை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது. சுமார் 35 ஆயிரம் கோடி ஊழல் செய்த ரெட்டி சகோதர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாக்க சிபிஐ முயற்சி செய்து வருகிறது.

    எனவே, சிபிஐ தற்போது மத்திய விசாரணை அமைப்பாக இல்லாமல் சுரங்க ஊழலில் சிக்கியவர்களை பாதுகாக்கும் அமைப்பாக உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #KarnatakaElection2018 #RahulGandhi 
    கர்நாடக மாநிலத்தில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான தேர்தல் தேதியை ஒத்திவைக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #KarnatakaElections #VotersCard #Rajarajeshwariconstituency
     பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் தங்கியுள்ள பிளாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று புகார் வந்தது.

    இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.


    இதுதொடர்பாக, கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமாரை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று மாலை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

    ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இவ்விவகாரத்தில் உரிய முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையர் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. #KarnatakaElections #VotersCard #Rajarajeshwariconstituency
    ×