search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜராஜேஸ்வரிதொகுதி"

    கர்நாடக மாநிலத்தில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான தேர்தல் தேதியை ஒத்திவைக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #KarnatakaElections #VotersCard #Rajarajeshwariconstituency
     பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் தங்கியுள்ள பிளாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று புகார் வந்தது.

    இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.


    இதுதொடர்பாக, கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமாரை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று மாலை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

    ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இவ்விவகாரத்தில் உரிய முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையர் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. #KarnatakaElections #VotersCard #Rajarajeshwariconstituency
    ×