search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanalkadu wild elephants"

    கொடைக்கானல் அருகே உள்ள கானல்காடு பகுதியில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான மருமலை, கே.சி.பட்டி, கவாபட்டி, பள்ளத்து கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    அவை தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்றும், நேற்று முன்தினமும் கானல்காடு பகுதியில் யானைகள் தென்னை மரம், வாழை, காபி போன்ற பயிர்களை சேதப்படுத்தின. எனவே பொதுமக்களின் நலன்கருதி காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×