search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jal Shakti ministry"

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, அவர் பதவியேற்றதும் ஜல் சக்தி துறையை உருவாக்கி, மந்திரியை நியமித்துள்ளார்.
    புதுடெல்லி:

    குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக ‘ஜல் சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தனி துறை உருவாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மோடி மந்திரி சபை நேற்று பொறுப்பேற்றபோது, ஜல் சக்தி துறை உருவாக்கப்பட்டது.



    அந்த துறையின் மந்திரியாக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தவர் தற்போது கேபினட் மந்திரியாக உயர்ந்துள்ளார்.

    மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறுசீரமைத்து இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×