search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ivagiri"

    • சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
    • முருங்கை கீரை சூப், வரகு அரிசி கொலுக்கட்டை, தினை அரிசி அப்பம், சாமை அரிசி லட்டு, அவித்த கொண்டைக்கடலை, முளைகட்டிய தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமிராமன் செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு, தினை, தானிய வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்பதால் கிடைக்கக்கூடிய பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். பாதுகாப்பு தரும் உணவு, சக்திதரும் உணவு, வளர்ச்சிதரும் உணவுகளான முருங்கை கீரை சூப், வரகு அரிசி கொலுக்கட்டை, தினை அரிசி அப்பம், சாமை அரிசி லட்டு, அவித்த கொண்டைக்கடலை, முளைகட்டிய தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், அலுவலர்கள், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தை மைய பணியாளர்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×