search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron tablets"

    • பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

    உடுமலை:

    வளர் இளம் பருவத்திலுள்ள பள்ளி மாணவிகளுக்கு ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், போலிக் அமிலம் கொண்ட இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாத்திரைகள் வழங்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

    உடுமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட்டது. எஸ்.வி.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம், ஆசிரியை சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் ரத்த சோகையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், காய்கறி மற்றும் கீரை வகைகள் உட்பட சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

    ×