search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INTUC"

    • சங்க பொதுச்செயலாளர் கதிர்வேல் தலைமையில் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • அக்டோபர் மாதம் இறுதிக்குள் புதிய சம்பளம் பேசி அமுல்படுத்தப்படும்

    தூத்துக்குடி:

    ஐ.என்.டி.யு.சி. பொது செயலாளர் கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தன்பாடு உப்பளங்களில் விற்று முதல் மூடை சுமை வேலை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. புதிய சம்பள உயர்வு அமல்படுத்த வேண்டும்.

    இது தொடர்பாக பல முறை தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தி யாளர்கள் சங்கத்திற்கு தேசிய தன்பாடு கப்பல் வாக்கின் அரவை தொழிலாளர் சங்கம் (ஐ.என். டி.யு.சி.) சார்பாக பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் சங்கத்தில் பொதுச்செயலாளர் கதிர்வேல் தலைமையில் சம்பள பேச்சுவார்த்ைத நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் நிர்வாக தரப்பில் செல்வராஜ், முருகேசன், தேன்ராஜ், பரத், ஆதித்யா, செந்தில் சேகர்,தர்மர் ஆகியோரும் தொழிற்சங்க நிர்வாகத் தரப்பில் ஸ்டாலின் ராஜே ந்திரன், அம்மாள், சாமுவேல், சிலுவை, குட்டிராஜா, செல்லையா மாரியப்பன், சித்திரை குமார், கண்ணன் தங்கப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் காங்கிரஸ் எடிசன், செயல் தலை வர்கள் ராஜ கோபாலன், பெருமாள் சாமி, செய லாளர்கள் ஸ்டாலின், குட்டி, பொருளாளர் க ண்ணன், கமிட்டி நிர்வா கிகள் ராஜேந்திரன், சாமுவேல், பிரபாகரன், சரவணன், ராஜன், சிலு வை, சின்ன ராஜா, எஸ். சாமு வேல், சொர்ண பாண்டி, அம்பாள் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.

    பேச்சுவார்த்தையில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் புதிய சம்பளம் பேசி அமுல்படுத்தப்படும் என பொதுச்செயலாளர் கதிர்வேல் தெரிவித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×