search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hashish sale"

    சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயரிங் பட்டதாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் சின்னவீராம்பட்டினம், சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதாரணை உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பையில் இருந்து சிறு சிறு பொட்டலங்களை எடுத்து மற்றொரு வாலிபர் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு இருந்தார்.

    இதனை நேரில் கண்ட போலீசார் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் மணவெளி பெரியார்நகரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ராமச்சந்திரன்(வயது 28) என்பதும் மற்றொருவர் திருவண்ணாமலையை சேர்ந்த உமாமகேஸ்வரன்(31) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா வியாபாரியான உமா மகேஷ்வரன் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து ராமச்சந்திரனிடம் கொடுத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா, மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் அரியாங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், உமா மகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீசாருக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் பாராட்டு தெரிவித்துள்ளார். 
    ×