search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guards attack"

    கும்பகோணத்தில் மதுகுடிக்க பணம் கேட்டு காவலாளிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்குவீதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக அருண்ராஜ் (வயது 40) மற்றும் கலியமூர்த்தி (45) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நகைக்கடைக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 2 மர்ம நபர்கள் மது அருந்தி விட்டு அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அருண்ராஜ் மற்றும் கலியமூர்த்தி ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×