search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government College for Women"

    • சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனவிலங்குகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது.
    • சாத்தான்குளம் அரசு கால்நடை மருத்துவர் காயத்ரி வனவிலங்குகளின் வாழ்வியலையும், அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனவிலங்குகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் முதல் பரிசினை மாணவி பேச்சியம்மாளும், 2-வது பரிசினை சிராஜ் இர்பானாவும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் ஞான அந்தோணி ஜெனிபர் முதலிடத்தையும், ரேவதி 2-வது இடத்தையும் பெற்றனர். பானையில் ஓவியம் தீட்டுதல் போட்டியில் சித்ரா பவானி முதலிடத்தையும், கிருஷ்ண ஜீவா 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர். சுவரில் ஓவியம் தீட்டும் போட்டியில் மாணவிகள் ஜெசிகா, கவிதா முதலிடத்தையும், பிரின்ஸி ராணி, இந்துமதி ஆகியோர் 2-வது இடத்தையும் பெற்றனர். போட்டிகளை பேராசிரியைகள் உமாபாரதி, வளர்மதி ஆகியோர் நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவில் சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அரசு கால்நடை மருத்துவர் காயத்ரி கலந்து கொண்டு வன விலங்குகளின் வாழ்வியலையும் அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பூங்கொடி, சண்முக சுந்தரி, ஆனந்தி, நீமா தேவ் பொபீனா மற்றும் பேரவை மாணவிகள் செய்திருந்தனர்.

    ×