search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GOLDEN JUBILEE OF ADMK"

    • பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெறும். அ.தி.மு.க.வை தி.மு.க.வால் ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியுள்ளார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    மதுரை

    அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டம் மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவினை விமரிசையாக கொண்டாட மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. மக்களி டம் பொய்யான வாக்குறுதி களை அளித்து சொற்ப வாக்குகள் வித்தியா சத்தில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இனி அ.தி.மு.க. தொண்டர்கள் தூங்கப் போவதில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றியை பெரும்.

    இதற்காக தமிழக மக்களும் தயாராக இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடத்தை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புகட்டுவார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடியல் தர போகிறேன் என்றார். ஆனால் இப்போது அவருக்கே சரியாக விடியாமல் இருக்கிறது. மக்களுக்கு எப்படி அவரால் விடியல் கிடைக்கும். சர்வாதி காரியாக மாறுவேன் என்று கர்ஜித்த மு.க. ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்டிக்க துணிவு இல்லாமல் பம்மி வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. வீழ்ச்சி அடைந்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அ.தி.மு.க.வை தி.மு.க.வால் ஒரு போதும் வீழ்த்த முடியாது. ஆட்சியில் இருந்ததை விட இப்போது பல மடங்கு பலமிக்க இயக்கமாக அ.தி.மு.க. உருவாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்ட ர்கள் அனைவரும் வீறு கொண்டு செயல்பட்டு வருகிறோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அத்தனை தேர்தல்களிலும் இனி அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. இதற்கு முன்னோட்டமாக கழக பொன்விழா மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை வெகு விமரி சையாக நாம் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

    ×