search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold price decrease"

    சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து, இன்று ஒரு சவரன் ரூ.23,072-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.60 குறைந்து ரூ.23 ஆயிரத்து 128 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ2,884-க்கு விற்கிறது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பும் தங்கம் விலை குறைய காரணம் என கூறப்படுகிறது.

    வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 42 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.40-க்கு விற்கிறது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் 23,584-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 536 ஆக இருந்தது. விலை ஏற்ற இறக்கத்துடன் நேற்று முன்தினம் ரூ.23 ஆயிரத்து 760-க்கு விற்றது.

    நேற்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808 ஆக இருந்தது. இன்று அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 584 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.28 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,948-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44.30-க்கு விற்கிறது. #Tamilnews
    ×